Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - January 27 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

துணை கிட்டியது

கட்டுக் கடங்காப் புரவிகளாய்க்
.. கால மெல்லாம் என்மனத்தை
எட்டுத் திக்கும் இழுத்தலைத்தே
.. இடும்பை படுக்கும் புலன்காள்!உம்
கொட்டம் அடங்கும் வேளையின்று
.. கூடி வந்த தென்துணையாய்
நட்டம் பயில்வோன் வந்துவிட்டான்
.. நாடி தெறிக்க ஓடிடுவீர்!

No comments: