Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - December 18 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


தொண்டர்தம் பெருமை


நினைக்கும் மனத்திலெழு(ம்) நிகழ்வில் அமிழ்ந்துவிழி
.. நிறைக்கும் சலத்திலுடல் நனையுமே
மனைக்கும் பொருட்குமுள விழைவும் அகன்றுவினை
.. விலக்கும் திறத்தின்வகை அறியுமே
அனைத்தும் மறைத்ததனில் அகமும் அடங்கிவெளி
.. அடுக்கும் பெருத்தநிலை அமையுமே
கனைக்கும் சதங்கையணி தலைவன்/கடவுள் பதம்தமது
.. கருத்தில் நிறுத்தியவர் வகையிதே

No comments: