Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - February 26 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நம்பி வந்தேன்

கொன்றைமலர் கூவிளம் அன்றலருந் தாமரை என்றபல வானபூ வகையேதும்
.. கொஞ்சமுமி லாதுவான் பிஞ்சுவிழு மாறுவெண் மஞ்சுபனி வீழுமோர் தலம்நாடிச்
சென்றடைந்து வாழுமிப் பன்றியனை யேனொரு நன்றுசெய வேமனம் இலனாகத்
.. தின்றுறங்கும் வேலையை அன்றியறி யேனுனை என்றடைய லாகுமென் றழும்வேளை
கொன்றுவிடு மாறுவந் தொன்றியதொர் நோயினால் அன்றுனது தாளிணை தனைமேவிக்
  .. கும்பிடுசெய் தார்பிணி சென்றுவிடு மாறுநீ நின்றருளி னாயெனும் உரையாலே
இன்றுவரு மேழையென் குன்றனைய தீவினை வெந்தெரியு மாறுநீ புரிவாயே
.. என்றுமுள தேவ!பொன் மன்றில்நட மாடுவெண் குன்றமென வேயொளிர் பெருமானே!


பிஞ்சு = பிய்ந்து;
“கொன்றுவிடுமாறு... கும்பிடு செய்தார்” -- திருநாவுக்கரசர் சரிதக் குறிப்பு

No comments: