Wednesday, November 21, 2012

April 04 2012 கூட்டிக்கொள்வாய்

திருச்சிற்றம்பலம்

<> கூட்டிக் கொள்வாய் <>

 
 









ஏட்டில் எழுத இயலாத எழிலோ(டு) ஐய! கயிலையில்நீ
.. இரவும் பகலும் இழைந்துநிற்கும் இனிய பிரதோ சப்பொழுதில் 

ஆட்டம் புரியும் அவ்வழகை அருந்தித் திளைக்க ஆயிரமாய்
.. அமரர் முனிவர் கணங்களெல்லாம் அண்டி நிற்க அவருடனே

காட்டில் வதியும் கட்செவியும் கலைமான் ஒன்றும் புலியொன்றும்
… காளை ஒன்றும் கண்குளிரக் காண வைத்தாய் கூத்தை,அந்தக்

கூட்டத் தோடு குதிபோட்டுக் கூவ என்றன் மனக்குரங்கை
.. கூட்டிக் கொள்ளின் உனக்கேதும் குறையும் வருமோ கூறுவையே

குறிப்பு:
கட்செவி = பாம்பு;  கலைமான் = நடராஜர் கையில் ஏந்தும் மான்;
காளை- வாகனமாகிய இடபம்;  புலி = வியாக்கிரபாதர்;.
தேவர், முனிவர் கூட்டம் மட்டுமன்றி விலங்குகளும் தன் ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்ற ஈசனின் கருணையை முன்வைத்துப் பாடியது.

இசை ஒலிப்பதிவு: 
http://raretfm.mayyam.com/ananth/Koottik_koLvAy.mp3

No comments: