உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
பாராமுகம் ஏனோ?
வேட்டுக் குறத்தியுடன் – தேவ
....வேந்தன் தனயை இருபுற மாயவர்
கூட்டுடன் வேல்முருகன் - கரம்
.. கூப்பித் தொழுது பணிந்துநிற் க,அவன்
சேட்டன் கணபதியும் – கூடச்
… சேர்ந்து துதிபல கூறிநிற்க முன்னைப்
போட்டி மறந்துமையாள் – உன்னைப்
.. போற்றிநிற் கஅந்தப் போதையி லேமேலும்
ஆட்டத்தில் மூழ்கிநிற்கும் – தில்லை
…. அம்பல வாண!நின் சந்நிதி முன்னின்று
வேட்டை முதற்பெயரோன் – உன்னை
.. வேண்டி அரற்றித்தன் வேதனை யாவையும்
பாட்டில் வடித்தபின்னும் - உன்றன்
.. பாட்டுக்குக் கூத்தாடிப் பாரா முகம்காட்டில்
நாட்டினர் ஏதுசொல்வார் – என்று
.. நாத னுனக்கிங்கு நான்சொல்ல வேண்டுமோ?
தேவ வேந்தன் தனயை- இந்திரன் புதல்வி தேவசேனா; தெய்வானை;
சேட்டன் - அண்ணன்
போட்டி மறந்து..…. = சிவபெருமான் உக்கிர தாண்டவராய் காளியுடன் செய்த நடனப் போட்டியில், நேரடியாக அன்றித் தந்திரத்தால் வென்றதை மறந்து
பாராமுகம் ஏனோ?
வேட்டுக் குறத்தியுடன் – தேவ
....வேந்தன் தனயை இருபுற மாயவர்
கூட்டுடன் வேல்முருகன் - கரம்
.. கூப்பித் தொழுது பணிந்துநிற் க,அவன்
சேட்டன் கணபதியும் – கூடச்
… சேர்ந்து துதிபல கூறிநிற்க முன்னைப்
போட்டி மறந்துமையாள் – உன்னைப்
.. போற்றிநிற் கஅந்தப் போதையி லேமேலும்
ஆட்டத்தில் மூழ்கிநிற்கும் – தில்லை
…. அம்பல வாண!நின் சந்நிதி முன்னின்று
வேட்டை முதற்பெயரோன் – உன்னை
.. வேண்டி அரற்றித்தன் வேதனை யாவையும்
பாட்டில் வடித்தபின்னும் - உன்றன்
.. பாட்டுக்குக் கூத்தாடிப் பாரா முகம்காட்டில்
நாட்டினர் ஏதுசொல்வார் – என்று
.. நாத னுனக்கிங்கு நான்சொல்ல வேண்டுமோ?
தேவ வேந்தன் தனயை- இந்திரன் புதல்வி தேவசேனா; தெய்வானை;
சேட்டன் - அண்ணன்
போட்டி மறந்து..…. = சிவபெருமான் உக்கிர தாண்டவராய் காளியுடன் செய்த நடனப் போட்டியில், நேரடியாக அன்றித் தந்திரத்தால் வென்றதை மறந்து
No comments:
Post a Comment