Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - February 11 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

கைதருவோன்

சந்தக் குழிப்பு:

தாத்தத் தைதன தாத்தத் தைதன தாத்தத் தைதன தனதான


காற்றுப் பையொரு சோற்றுப் பைசிறு நீற்றுப் பையென உருவான
தோற்றத் தைவெகு நாற்றத் தையுமிழ் ஊத்தைப் பொய்யிதை நிசமாக
ஏற்றுப் பைபெற நோற்றுச் செய்பல கூத்திற் கைதவம் அடைவேனை
மாற்றிச் செய்கழல் போற்றக் கைதரும் சீற்றப் பையர வணிவோனே!



காற்றுப்பை, சோற்றுப்பை, நீற்றுப் பை = நுரையீரல், வயிறு, சிறுநீரகம்;
ஊத்தை= அழுக்கு, ஊண், புலால் நாற்றம்;
பை = அழகு, இளமை;
நோற்றல் = தவம் செய்தல்
கைதவம் = துன்பம், வருத்தம்,
செய்கழல்= கழல் அணிந்த சிவந்த பாதம்;
பையரவு = படம் உடைய பாம்பு.

No comments: