திருச்சிற்றம்பலம்
இன்று சிவராத்திரித் திருநாளுக்கு முந்தியபிரதோஷச் சிறப்பு நாள்.
<> மலர்ந்த பேரருள் <>
இன்று சிவராத்திரித் திருநாளுக்கு முந்தியபிரதோஷச் சிறப்பு நாள்.
<> மலர்ந்த பேரருள் <>
இலங்கை யோனுளங் கலங்க ஓர்விர(ல்)
.. இருத்திநீள்முடி நெரித்த வன்புர மெரித்தவன்
நலங்கள் யாவையும் வழங்கி நல்வழி
.. நடத்துவான்மதி புனைந்த வன்புனல் நனைந்தவன்
சலங்ச லாங்கென முழங்கு மாகழல்
.. தரித்த சேவடி நடத்தி லேஉளங்கிடத்திடின்
மலங்க ளால்விளைமயக்க(ம்) மாய்ந்தவன்
.. மலர்ந்த பேரருள் வளத்தி லேஉளந்திளைக்குமே.
..அனந்த் 19-2-2012
இசை ஒலிப்பதிவு:
http://raretfm.mayyam.com/ananth/Malarndha.mp3
No comments:
Post a Comment