உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
சென்ற வாரம், என் வாழ்விலேயே முதன் முறையாகத் திருவாதிரைத் திருவிழாக் காலத்தில் அன்னை சிவகாம சுந்தரியுடன் திகழும் என் ஐயன் தில்லை நடராஜனின் திவ்விய தரிசனம் கிட்டியது.
நான் சிதம்பரத்தில் இருந்த ஐந்து நாட்களில், அம்மையுடன் நடநாயகன் திருவீதி உலா வந்த காட்சிகளும் திருத்தேரில் வீதிவலமும், எல்லாவற்றிற்கும் சிகரமாக, சிதாகாச உருவில் அம்மையப்பனின் ஆர்த்ரா மஹா அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அம்மையுடன் சேர்ந்து நடத்திய அவனுடைய சித்சபா பிரவேசத்தின் போது அருளிய மஹா கோலாகலக் காட்சியைக் காணக் கிடைத்த அனுபவத்தைச் சொல்லில் அடக்க இயலாது.
அவ்வேளையில், பிரதோஷச் சிறப்பு நன்னாளில் (6-1-2012) பல்லாண்டுகளுக்குப் பின் ஐயன் முன் நின்று அவனுடைய பேரழகைக் கண்ட உணர்வில் தோன்றிய பாடல் கீழே உள்ளது; பிழையிருப்பின் பொறுத்தருளவும்:
காட்சி தந்தான்
கதறவைத் தாய்என்றன் கண்டம் வெடிக்கக் கழலடியில்
சிதறவைத் தாயென்றன் கண்ணீர் தெறித்திடச் சித்தமெல்லாம்
பதறவைத் தாயென்னைப் பெற்றவா என்றதும் பந்தமெல்லாம்
உதறவைத் தாயெனை உன்னவன் என்றே உணரவைத்தே
------------------------
பெருத்த மழையின் விளைவாய்ப் பயணத்தில் விளைந்த இடையூறுகளை ஒவ்வொன்றாக நீக்கிய சிற்றம்பலத்தானைத் தில்லையில் கண்டபின் அங்குத் தோன்றிய பாடல்:
கண்டேன்
கரும்பினைப் போன்ற களிநடக் காட்சியைக் காணஎன்னை
விரும்பவைத் தாய்பினர் வேண்டிய தந்தாய் விரைந்துவந்தேன்
அரும்பதம் கண்டேன் அருகினில்; அம்பலத் தாடும்ஐய!
இரும்பவ நோய்தரும் இன்னலும் உண்டோ இனியெனக்கே.
…அனந்த் 11.1-2012

No comments:
Post a Comment