உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
இன்று மீண்டும் சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
கீழே காணும் பாடல் ’ச்ரக்விணீ’ என்னும் சந்தத்தில் (5 மாத்திரை உள்ள 4 கூவிளச் சீர்கள் கொண்டது) அமைந்த எட்டுச் செய்யுள்களைக் கொண்ட தொகுப்பு(அஷ்டகம்). இச்சந்தத்தைப் பற்றியும் இப்பாடலையும் முன்பு இக்குழுவில் கண்டுள்ளோம்.
ஸ்ரீசங்கர பகவத் பாதரின் ‘அச்யுதாஷ்டகம்’ போன்ற துதிகள் இந்தச் சந்தத்தில் அமைந்தவை:
அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே
தில்லைநல்லோன் அட்டகம்
அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)
நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)
குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)
புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன் (4)
ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5)
பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றென்னையும் ஆதரித் தாளுவாய் (6)
விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)
கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8)

1 comment:
இனிமை இனிமை இறைவன் இனிமை
இயம்புவோர் சொல்லோ இன்னமும் இனிமை
திவாகர்
அன்பு அனந்த் அய்யா! அருமையான அட்டகம்.
பல கருத்துகளும் பகவானின் ஸ்ரீ அருணாசல அக்ஷர மணமாலையின் பாக்களை நினைவு படுத்துகின்றன. பக்குவப்பட பக்குவப்பட பாட்டுகள் இதே போல் இருப்பதில் என்ன ஆச்சரியம்?
ஒட்டியே உள்ளினுக் குள்ளுறை ஒன்றுதான்
வெட்டிம றந்திட வேறொரு வில்ல.நான்
அட்டகா சத்தினை அட்டகப் பாவழி
கொட்டம டக்கி.நான் கொல்வதும் கூத்தனே!
..மூர்த்தி (அவனடிமை)
================
Post a Comment