Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - July 28 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

மருமம் என்னே ?

சிறகடிக்க அறியாத சிறுகுஞ் சொன்று
.. செலும்வழியில் விழுந்திடரில் வாடுங் கால்தாய்ப்
பறவையதற் குதவாமல் வாளா நின்று
.. பார்த்திருப்பின் பார்ப்பின்உளம் பதறா தோ?நான்
அறநெறியில் செலநினைக்கும் வேளை யெல்லாம்
.. அகத்திலுள அகந்தையெனைத் தடுத்துத் தள்ளிப்
புறமொதுக்கும் அவதியினைப் போக்கா(து) அங்கே
.. புன்னகைநீ புரிந்துநிற்கும் மரும மென்னே ?

பார்ப்பு - பறவைக் குஞ்சு
 

No comments: