Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - November 19 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சொல் இல்லை

வேதமோர் நான்கென விரிந்துமெய்ப் பொருளினை
.. விளக்கிட முயன்று தோற்க,
மாதவன் கீதையில் மறக்களம் தனிலதை
.. விரித்திட வார்த்தை வேண்ட,
யாதுமே மொழிந்திடா மௌனியாய் எம்மிறை
.. ஆலடி அமர்ந்து ஞானப்
போதமே தானெனப் புகன்றிடும் பாங்கினைப்
.. போற்றிட இல்லை சொல்லே

No comments: