Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - May 11 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஓடி வந்தேன்

தேடியோ உன்னைநான் தெரிந்துகொண் டேன்பர
.. தேவ! என்னை
நாடியே என்னுளம் புகுந்தனை நானும்அஃ துணர்ந்தபின்
.. நாளும் உன்னைப்
பாடியே நெஞ்செலாம் பரவசம் பரவிடப் பார்த்ததால்
  .. பைத்தி யங்கொண்(டு)
  ஓடியே வந்துளேன் என்னைஉன் னவன்என நீஉகந்(து)
.. ஒப்பு தற்கே

No comments: