Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - March 17 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

புலனூடுறை பூரணன்

மலர்எழிலும் அதன்மணமும் மதுவின்களி தருசுவையும்
.. வருடுமிளம் வளியசைவும் வண்டுமுரல் இசையொடு(ம்)ஐம்
புலன்வழியே நுகர்வதெல்லாம் பூரண!நின் வடிவமிது
.. புரிந்திடுநல் லடியரொடு புன்மையனும் ஒருங்கஎன
மலமகற்றிப் படிகமென மனமளித்துன் நினைவுறையும்
... வரமுமெனக் களித்திடுபொன் மன்றில்உமை மருவநிதம்
சலசலவென் ரொலியெழுப்புஞ் சதங்கையுடன் நடம்பயிலும்
.. தலைவ!தவ முனிவர்பணி சரணமுடை பரம்பொருளே!


ஒருங்குதல்= கூடுதல்;
என=எனது

No comments: