உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
வாய்பாடு: 6 புளி(நெடில்)மா
நாமம் புகல அருள்வாய்
கரிமா உரியோய்! கறைசேர் மிடறோய்!
...கடலார் விழியாள் கணவா! முடிதாள்
அரியோ டயனார் அறியா அழலே!
...அருமா மறையே! அமுதே! அரசே!
பரிவே உருவாம் பரனே! வினைதீர்
.. பதியே! எனவே பலவாய் உடல்பாழ்
எரிவாய் விழுநாள் இறையே! உனபேர்
.. எனநா மறவா இயல்பே அருளே!
’முடிதாள் அரியோ டயனார் அறியா’ -- முடியை அயனும் தாளை மாலும் அறியாத என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க;
உனபேர்= உனது நாமம்;
எனநா = எனது நாவு
வாய்பாடு: 6 புளி(நெடில்)மா
நாமம் புகல அருள்வாய்
கரிமா உரியோய்! கறைசேர் மிடறோய்!
...கடலார் விழியாள் கணவா! முடிதாள்
அரியோ டயனார் அறியா அழலே!
...அருமா மறையே! அமுதே! அரசே!
பரிவே உருவாம் பரனே! வினைதீர்
.. பதியே! எனவே பலவாய் உடல்பாழ்
எரிவாய் விழுநாள் இறையே! உனபேர்
.. எனநா மறவா இயல்பே அருளே!
’முடிதாள் அரியோ டயனார் அறியா’ -- முடியை அயனும் தாளை மாலும் அறியாத என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்க;
உனபேர்= உனது நாமம்;
எனநா = எனது நாவு
No comments:
Post a Comment