உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
வாதம் ஏன்?
நானேயோ உன்றனை நாடிவந்தேன் அன்றிநீ
தானே தடுத்தாண்டு கொண்டனையோ - வானார்
அமுதச் சுவையறிந்தேன் ஆங்கதன்பின் ஏனோ
நமக்குள்வீண் வாதம் நவில்
------------------------------------------------------
மகா சிவராத்திரித் திருநாள்
உருஅரு
தண்புனல் சடையன் தயைநிறை விழியன்
.. சார்ந்தநல் உமையொரு பாகன்
... தரித்ததோல் உடையன் சாருமோர் விடையன்
.... சங்கரன் நடம்புரிந் தென்றன்
எண்ணமாம் திரையில் எழுந்திடக் கண்டென்
.. என்பெலாம் உருக விழியில்
..... இழிந்திடும் அருவி மகிழ்ந்திடும் உள்ளம்
..... இங்ஙன்நான் மயங்கி நிற்கக்
கண்ணிமை மூடும் கணத்திலக் காட்சி
.... ககனமாம் வெளியில் கரைந்து
.... கடிதிலே மறையக் கண்டனன் அந்தோ!
...... கற்பனை யோஎன் உணர்வு?
விண்ணொடு மண்ணில் விளங்குவோய் உன்றன்
.. விந்தையென் வேதனை யாக
.... வெடித்திடல் அழகோ? விமல!என் உள்ளில்
..... மீண்டு(ம்)நின் வர(வு)எந் நாளோ?
..அனந்த் 23-2-2009
வாதம் ஏன்?
நானேயோ உன்றனை நாடிவந்தேன் அன்றிநீ
தானே தடுத்தாண்டு கொண்டனையோ - வானார்
அமுதச் சுவையறிந்தேன் ஆங்கதன்பின் ஏனோ
நமக்குள்வீண் வாதம் நவில்
------------------------------------------------------
மகா சிவராத்திரித் திருநாள்
உருஅரு
தண்புனல் சடையன் தயைநிறை விழியன்
.. சார்ந்தநல் உமையொரு பாகன்
... தரித்ததோல் உடையன் சாருமோர் விடையன்
.... சங்கரன் நடம்புரிந் தென்றன்
எண்ணமாம் திரையில் எழுந்திடக் கண்டென்
.. என்பெலாம் உருக விழியில்
..... இழிந்திடும் அருவி மகிழ்ந்திடும் உள்ளம்
..... இங்ஙன்நான் மயங்கி நிற்கக்
கண்ணிமை மூடும் கணத்திலக் காட்சி
.... ககனமாம் வெளியில் கரைந்து
.... கடிதிலே மறையக் கண்டனன் அந்தோ!
...... கற்பனை யோஎன் உணர்வு?
விண்ணொடு மண்ணில் விளங்குவோய் உன்றன்
.. விந்தையென் வேதனை யாக
.... வெடித்திடல் அழகோ? விமல!என் உள்ளில்
..... மீண்டு(ம்)நின் வர(வு)எந் நாளோ?
..அனந்த் 23-2-2009
1 comment:
மகா சிவராத்திரித் திருநாள்
-----------------------------------------
ரொம்ப அற்புதமான ஆற்றொழுக்கான சந்தமும் சொந்தமும் கொண்ட பாடல் .
வாழ்க அநந்த்.
(கீழ்க்கண்ட வரி ரசித்தேன்)
கண்ணிமை மூடும் கணத்திலக் காட்சி
.... ககனமாம் வெளியில் கரைந்து
.... கடிதிலே மறையக் கண்டனன் அந்தோ!
...... கற்பனை யோஎன் உணர்வு?
இதுபோன்ற ஒரு காட்சியை இன்றைய த்யானத்தில் ஒரு நிமிடம் கண்டு மெய்மறந்தேன்.
பரவசம் ! சிவராத்ரி அல்லவா?
யோகியார்
----------------------
Post a Comment