Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - June 02 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அருவானதென்னே?

இருமாதர் தம்மைத் துணையாக்கி
… இருமாக்கள் மேனி தனில்தாங்கி
இருகோள்கள் கண்கள் எனவாக்கி
… இருகோலம் காட்டி எமைவாட்டும்
இருபால தான வினைதீர்க்கும்
..இருபாலர் ஈந்த இறைவாநீ
அருவாக அண்ணா மலைமேலே
..அழலாக ஆன விதமென்னே?


இருகோள்கள்=சூரியனும் சந்திரனும்;
இரு மாக்கள்= மானும் அரவமும்
மா= விலங்கின் பொதுப் பெயர்;
இருகோலம் = அர்த்தநாரிக் கோலம்

No comments: