Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - March 06 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நெஞ்சத்தில் நீ

காயத்தில் பாம்பு கழுத்திலே நஞ்(சு)இடத்தில்
வேயனைய தோளினாள் வெண்சடையில் – தோயமொடு
பிஞ்சு மதிசுமப்பாய் பெம்மானே! நின்னையென்றன்
நெஞ்சில் சுமப்பேன் நிதம்.

என்னவொரு கொடுமையிது எங்கு(ம்)நிறை என்னிறையே!
என்னழுகும் உடலினிலே இதயமெனும் குகையினிலே
பொன்னனைய உன்னுருவைப் பூட்டிவைத்தேன் பொறுத்திடுவாய்
இன்னுமொரு பிறவியெதும் இலாநிலையில் விடுவிப்பேன்!

No comments: