Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - November 08 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

வாய்பாடு:   கருவிளம் மாவிளம் மா விளம் விளம் புளிமா


கரும்பினுட்கசிவே! களிதரு தேனே! கடலிடை விளைந்தபே ரமுதே!
..கனிகளின் பிழிவே! கறந்தபாற் சுவையே! கழறிட அரியவோர் கனவே!
அரும்பிடும்மலருள் ஒளிந்துறை மணமே! அருவிபாய்ந் திசைத்திடும் ஒலியே!
..அலைந்திடு தென்றல் அளித்திடும் சுகமே! மலையிடை வளருகற் பகமே!
சுரும்பதுமலரை வலம்வரும் வகையாய்த் தொண்டனேன் இங்ஙனம் தொடர்ந்து
..துதிபல வடித்துத் தொழுதிடல் கண்டுன் திருவுளம் மகிழ்ந்தெனக் கருள
விரும்பிநீஇசையா விடினும்நான் விலகேன் வேறொரு வழியிலை இவனை
..விதிவிலக் காகக் கருதுவோம் என்றிவ் வீணனுக் குதவிடக் குறியே




சுரும்பு=வண்டு

 

No comments: