உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
ஆயிரம் பிறவிகள் பாரிதில் எடுப்பினும்
.. ஐய!இச் சிறந்த நாளில்
... ஆடும்நின் கோலமாம் அரியதோர் காட்சியை
........ அகத்திலும் புறத்தும் கண்டு
கோயிலில் மலையினில் குளத்தினில் வனத்தினில்
.. கோடியாய்ப் பத்தர் கூடிக்
..... கும்பிடும் வேளையில் அவர்கள்தம் நடுவிலே
....... குணத்திலே தெருவி லோடும்
நாயினும் கீழுள நானுமுன் வாயிலை
.. நாடியே வந்த காலை
..... நாதனே! நின்னருட் செல்வமாம் பரிசுகை
....... நழுவியே அழுதல் ஆமோ?
தாயினும் தயைசெயும் சங்கரன் என்றுனைத்
.. தாரணி கூறல் அறிவாய்
..... தாமதம் இன்றியிவ் வேழையைக் காத்தலே
...... தக்கதோர் செய்கை யாமே!
ஆயிரம் பிறவிகள் பாரிதில் எடுப்பினும்
.. ஐய!இச் சிறந்த நாளில்
... ஆடும்நின் கோலமாம் அரியதோர் காட்சியை
........ அகத்திலும் புறத்தும் கண்டு
கோயிலில் மலையினில் குளத்தினில் வனத்தினில்
.. கோடியாய்ப் பத்தர் கூடிக்
..... கும்பிடும் வேளையில் அவர்கள்தம் நடுவிலே
....... குணத்திலே தெருவி லோடும்
நாயினும் கீழுள நானுமுன் வாயிலை
.. நாடியே வந்த காலை
..... நாதனே! நின்னருட் செல்வமாம் பரிசுகை
....... நழுவியே அழுதல் ஆமோ?
தாயினும் தயைசெயும் சங்கரன் என்றுனைத்
.. தாரணி கூறல் அறிவாய்
..... தாமதம் இன்றியிவ் வேழையைக் காத்தலே
...... தக்கதோர் செய்கை யாமே!
No comments:
Post a Comment