Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - May 04 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சும்மா இருந்தாய்

தருக்குமிகு நான்முகன் தனிமகிமை கூர்மொழிப் பொருளறிகி லானினி மறையோதத்
… தகுதியில னாமெனச் சிறையிலிடு மாறுசெய் தனயனது தாளிணை தனைமேவி
அருத்தமுரை யாயென அவனுனது காதினில் அரியதொரு வாசகம் சொலமேலே
.. அறையமொழி யேதுமே அறுநிலையி லேஅடை சுகமதனை நாடியே வருமாப்போல்
தரித்தசடை யோடொரு தருவடியி லேயமர்ந் தொருசொலுமி லாதவோர் குருவாகித்
.. தருபெரிய போதகந் தனையறிய நாடியோர் தமையுமுனைப் போலவே உருவாக்கிப்
பெருத்தநிதி யாதெனின் புதல்வர்சொலல் கேட்(டு)அவர் பெருமைதனைப் பேணலே எனவோதும்
.. பிரியமுள தாதையாய்ப் பெரும!உனைக் காட்டிய பணிவுபிற தேவருக் கிலதாமே.

No comments: