Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - January 08 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

வாரணத் துரியைப் போர்த்து
.. வன்னியும் அருகும் சூடிச்
சூரணச் சாம்பர் மேனி
.. துலங்கிட நிற்கும் தூயோய்!
நாரணன் அயனும் காணா
.. நாதனே! நடன மாடும்
பூரண! உன்னைப் போற்றும்
.. புந்தியை ஈந்து காப்பாய்!

No comments: