Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - September 20 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

யாவும் கடந்து...

அண்டப் பரப்பிலே அனைத்தையும் சமைத்தபின் அவற்றையும் கடந்து நின்றே
.. அறிவினால் உன்னுதற் கறியவொண் ணாததோர் ஆதியாய் விளங்கி மண்ணில்
பிண்டத் திரட்சியுள் பிறங்கிடும் பிராணனாய்ப் புகுந்ததைப் பிறக்க வைத்துப்
  .. பேரையும் வழங்கிஐம் புலன்களும் தந்(து)அவை புரிந்திடும் செயல்க ளாலே
மண்டிக் குவிந்திடும் மலமெலாம் நீங்கிட வழியெனத் தன்ப தத்தை
.. வழங்கிடும் அருளுமாய்த் திகழ்ந்திடும் பொருளுனை வழுத்திட வந்து நின்றேன்
கண்டத் திருத்திய கடுவிடம் பூண்டவா கடிமலர்க் குழலி னாளைக்
.. காத்திரம் சேர்த்திரண்(டு) ஒன்றெனக் காட்டினாய் காலனைச் செற்ற தேவே!

No comments: