Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - June 24 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


அருணைப் பொருள்


காற்றில் கலந்த மணம் போல
.. கடலில் கலந்த நதிபோல
மாற்றம் மறைந்தென் சிந்தையொரு
.. வரையில் லாத உணர்வாகத்
தோற்றம் பெருக்கம் முடிவில்லாச்
.. சோதிப் பிழம்பின் வடிவாகத்
தோற்றும் அருணைப் பொருளுள்ளே
.. துஞ்சும் நாளும் வந்திடுமோ?


துஞ்சும் = நிலைக்கும், மறையும்

No comments: