Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - October 12 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உள்ளே புகுந்த ஒன்று

உன்னை எண்ணி உருகிநின்றேன்
.. உடனே ஏதோ ஒன்றென்னுள்
மின்னிச் சொலித்தென் மேனிஎல்லாம்
.. விதிர்க்க வைக்கும் உணர்(வு)அடைந்தேன்
என்ன மாயம் புரியவில்லை
.. ஏனென்(று) அலச மனமும்இல்லை
முன்னம் அறியா மகிழ்ச்சி இது
.. முழுதாய் விரியப் பார்த்துநிற்பேன்!

No comments: