Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - October 26 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிக்கெனப் பிடித்தாய் (8)
 
இடமொடு காலம் எனுமிரு நிலையும்
... இறுதியோ டந்தமாம் யாவும்
கடந்தமெய்ப் பரமாய்க் காணுமோர் பொருளே!
... கருணையால் திருவுருக் கொண்டு
இடபவா கனனாய் இறைவியோ டிந்த
.. எளியனைக் காத்தல்நம் கடனென்(று)
அடம்பிடித் தென்னைச் சிக்கெனப் பிடித்தாய்
.. ஆரிடம் கூறுவேன் இதையே.

No comments: