Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - October 08 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/santhavasantham/message/20031


ஆறு கள்வர்


கள்ளர் அறுவர் என்னுளத்தே
.. கணத்தில் புகுந்தாங் கொளிர்கின்ற
வெள்ளைப் படிக வடிவொன்றை
.. வெளியே கடத்த விரைகின்றார்
துள்ளி உடன்வந் தவர்தம்மைத்
.. துரத்தாய் இன்றேல் துயரெனக்கும்
நள்ளி ருட்டில் நடம்புரியும்
.. நம்பா! உனக்கும் விளையுமன்றே!*


*ஆறு கள்ளர் = காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாச்சரியம் என்னும் தீயகுணங்கள்; நம்பன்= நம்பிரான், சிவன்

No comments: