Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - April 15 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அதிசயம்

பழுதே இல்லாப் பூசை யாவும்
.. பண்ணிப் பார்த்தேன் பயனில்லை
தொழுதேன் பலவாய்த் துதிகள் கொண்டு
. தொடர்ந்து பலநாள் பயனில்லை
மழுவார் ஈசா இரங்காய் எனக்கண்
.. மழையாய்ப் பொழிய, மனமிழந்தே
அழுதேன் அன்றே அடைந்தேன் உன்னை
.. ஐயா! இதுவோர் அதிசயமே!

No comments: