Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - August 10 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஆதி யோகி

அத்திமுகன் அருகமர ஆறுமுகன் மடியமர
.. அன்னைஉமை ஆகமதை அணைத்திருக்க அமரருடன்
சித்தர்முனி சேர்ந்துதொழத் தேவியர்கள் இருவருடன்
.... சீதரனும் நான்முகனும் சீர்பாடிச் சூழ்ந்திருக்க
மத்தளத்தின் ஒலிமுழங்க வாத்தியங்கள் இசைபயில
... வான்மகளிர் நாட்டியமும் மறையவர்தம் ஒலியுமென
இத்தனையாய்ச் சுகம்நடுவே ஏகாந்த மோனமதில்
.. இன்பமுறும் யோகியுனக் கிணையெனஎவ் விறையுளரே?

1 comment:

ananth said...

அனந்த் ஐயா,
அருமையான தியான சுலோகமாய் அமைந்திருக்கிறது.
அடிகளுக்கு வணக்கங்கள்!
Sekhar