Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - August 17 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அருமருந்து

சற்றும் நிலையாத் தனம்திரட் டித்துயர்
உற்(று)ஓர் கணமேனும் உண்மைச் சுகமின்றி
முற்றும் பயனில் முயற்சிபல செய்துநம்
சுற்றம் உறவினருந் தூற்றும் படியாக
எற்றுக்கிவ் வின்னலுறு வாழ்வுற்றோம்? என்றுநம்
*பற்றிற்றுப் பாறிடும்?என் றெண்ணிப் பதறற்க!
பொற்றாளைத் தூக்கிநற் பேரின்பப் பெற்றிதனைக்
கற்றோர்க்கும் மற்றோர்க்குங் காட்டிக் களிப்பேற்றும்
சிற்றம் பலத்தான்றன் சீரடியைப் பற்றிடுவீர்
மற்றேதும் வேண்டாம் மருந்து.

1 comment:

ananth said...

-------------------

சீருடனே ஒன்றினையே சிந்தைசெய்க என்பதற்கா
ஓரெதுகைப் பாட்டுவுத் தி?

இரு கேள்விகள்

பற்று என்பது ஒரு நோயா? வாழ்வில் இன்னல் இருக்கலாம். ஆனால் இன்னலே வாழ்வா?

இல்லையே!

ilandhai
------------------------