Saturday, November 24, 2012

அறிந்திலனே - August 29 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

<> அறிந்திலனே<>


வலஞ்சுழியும் ஐயாறும் வான்மி யூரும்
.. மயிலாடு துறைஆனைக் காவும் மேலும் 

தலம்பலவும் சென்றுன்றன் திருக்கோ லத்தைத்
.. தரிசனம்யான் செய்வதற்கிச் சன்மந் தன்னில்

நலம்தருமா(று) உன்னடியார்க்கு ஒருதொண் டேனும்
.. நல்காமல் வாழ்ந்தனனென் றெண்ணி யென்னைப்

புலம்பெயர்ந்தோர் தொலைவில்போய் வாழும் வண்ணம்
.. புகுத்தினையோ அறிந்திலனே பொற்ச பேசா

அனந்த் 29-8-2012 

==============


புலம்பெயர்ந்தோர் தொலைவில்போய் வாழும் நிலை
வந்ததனால் சிவத்தைநாடி வரும் வழியும்


கலந்தொருநாள் சிவனடியார் [.சா.] நல்லுறவும் கண்டு
சிறந்ததொரு தமிழ்மொழியில் பாக்கள் புனையும்

நலமெனக்கு அருளிடத்தான் கருணை கூர்ந்து
ஆசையைப் புகுத்தியெனுள் நற்றமிழில் நிறைவான

இலக்கணமும் தெளிவுறுத்தி யருள் செய்தீர்
அம்பலத்தில் நடனமிடும் பொற்ச பேசா!

சங்கர் குமார் 

1 comment:

ananth said...

புலம்பெயர்ந்தோர் தொலைவில்போய் வாழும் நிலை
வந்ததனால் சிவத்தைநாடி வரும் வழியும்
கலந்தொருநாள் சிவனடியார் [த.சா.] நல்லுறவும் கண்டு
சிறந்ததொரு தமிழ்மொழியில் பாக்கள் புனையும்
நலமெனக்கு அருளிடத்தான் கருணை கூர்ந்து
ஆசையைப் புகுத்தியெனுள் நற்றமிழில் நிறைவான
இலக்கணமும் தெளிவுறுத்தி யருள் செய்தீர்
அம்பலத்தில் நடனமிடும் பொற்ச பேசா!

சங்கர் குமார் (ரத்தின மாலை)