உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
பேரொளி
பொன்நிகர்த்த உடல்கண்டேன் புலரும் பசுங்கதிரில்
மன்னுமருள் முகங்கண்டேன் மதியின் குளிர்நிலவில்*
மின்னிடுமென் நகைகண்டேன் விண்மீன் வெளிர்சுடரில்
என்னுள்உனை நிதங்கண்டேன் இலங்கும் பேரொளியாய்
*நிலவு= ஒளி, இங்குச் சந்திரனின் ஒளி

1 comment:
அற்புதம்! சாமீ! மிக அற்புதம்!
ஒரு அத்வைதக் கருத்தையன்றோ சொல்லுள்ளே பதுக்கிவைத்துக் களிநடம் புரியச் செய்துவிட்டீர்கள்!
வாழ்க!
யோகியார்
Post a Comment