Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - March 03 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஓய்வெடுப்பாய், என்னரசே!

வெள்ளியாம் அம்பலத்தும் மீண்டும் சிதம்பரத்தும்
துள்ளிநீ ஆடுகின்ற சோர்வொழிய என் செல்வா!

வெள்ளைத்தண் மெத்தையாய் வேந்தனுனக் காவென்றன்
உள்ளத்தை மாற்றியுள்ளேன் ஓடிவா! பன்மலர்கள்

அள்ளித் தெளித்தங்(கு) அகிலோடு சந்தனமும்
மெள்ள இசைக்கும் மெல்லிசையும் வாத்தியமும்

கொள்ளையாய்க் குவித்த கனிவகையும் வைத்துநான்
நள்ளிரவும் நண்பகலும் காத்திருப்பேன் என்னருமைத்

தெள்ளமுதே! வந்துன் திருமேனி சாய்த்திங்கே
பள்ளிகொண்டு ஓய்வெடுப்பாய்! பின்னர்நடம் தொடர்ந்திடலாம்!

No comments: