திருச்சிற்றம்பலம்
<> நண்ணுமினே <>
யாப்பு: அறுசீர் விருத்தம்: அரையடி: மா மா காய்;
1,3 சீர் இயைபெதுகை; 1,3, 5 சீர் மோனை (ஈற்றடியில் 1,3 சீர்க்கிடையே வருக்க மோனை)
அனந்த் 12-11-2012
<> நண்ணுமினே <>
விடத்தை அடக்கும் மிடற்றோன்காண்
.. வெண்ணீ றணியும் தண்மையன்காண்
படத்தோ டாடும் நடத்தோன்காண்
..பகைத்தோர் புரத்தைப் புகைத்தோன்காண்
இடத்தில் உமைக்கோர் இடத்தோன்கான்
..இடுப்பில் புலித்தோல் உடுத்தோன்காண்
புடப்பொன் மேனி படைத்தோன்காண்
..புண்ணியன் இவனை நண்ணுமினே
யாப்பு: அறுசீர் விருத்தம்: அரையடி: மா மா காய்;
1,3 சீர் இயைபெதுகை; 1,3, 5 சீர் மோனை (ஈற்றடியில் 1,3 சீர்க்கிடையே வருக்க மோனை)
அனந்த் 12-11-2012
No comments:
Post a Comment