Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - October 08 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நேரம் குறையுது, ஐயே!

நேரமோ குறையுதென் நெஞ்சுளே உயிர்த்துடி
...நின்றிடும் காலம் மேலும்
....நெருங்கியே வருகுது, நாளெலாம் பாழ்செயும்
.....நீசன்து ராச னேனின்

ஓரவா ரங்களோ ஒருகடு(கு) அளவினும்
...ஒழிந்ததாய்க் கண்டி லே(ன்)உன்
....ஒருவனைத் தவிரவே(று) உலகுள யாவையும்
.....உகந்திடும் உலுத்தன் என்னைப்

பாரமாய்க் கருதிநீ உதறுவாய் என்னும்அப்
..பயத்திலே விதிர்த்து நிற்கும்
....பாவியேன் உய்ந்திடப் பரம!நீ மன்றிலே
.....பாவையோ டாடு(ம்) வேளை

ஓரமாய் நின்றுனை ஒருமுறை பார்த்திட
...உத்தர வளித்தி டாயோ?
....உலகெலாம் அதன்வழி உனதுபே ரருள்வளம்
.....உணர்ந்திட வகைசெய் யாயோ?


உயிர்த்துடி= உயிரின் ஆற்றல் (strength), வேகம்;
நீசம்= ஈனம்; இழிவு; கொடுமை, தாழ்ச்சி;
துராசன்=கெட்ட ஆசையை உடையவன்;
ஓரவாரம்= ஓரவஞ்சனை, பக்ஷபாதம்;
விதிர்த்தல் = நடுங்கல், உதறுதல்

1 comment:

ananth said...

Dear Sir,

"Neramo kuraiyudhu...".

The Great Gazal king Jagjit Singh, who sang Hey Ram...hey Ram..died today.

Pattinathar said, "Vittu vidappogudhuyir...Suttuvida pogirar unnai..", refers to the same thing.

The old proverb "Kaatrulla podhey thookikkol" also signifies the same.

Very beautiful composition

"நேரமோ குறையுதென் நெஞ்சுளே உயிர்த்துடி
...நின்றிடும் காலம் மேலும்
....நெருங்கியே வருகுது".

The last part of your composition

'ஓரமாய் நின்றுனை ஒருமுறை பார்த்திட
...உத்தர வளித்தி டாயோ?"

brings to my memory Kaalan enai anugamal unadhiru kaalil vazhipada arulvaye....

Thank you for forwarding your song. Good thing to receive on a monday morning.

Chandrasekar .P.K.Chandrasekhar
-----------
Another beauty --- porul nayamum, choll vazhamum niraintha oru unnatha kavithai.
Nandri.

K'nan
-----------

'துடி - உடுக்கை' என்று கொண்டு, உயிர்த்துடி - இருதயம் என்றும் கொள்ளலாமோ?

vi. cuppiramaNiyan

உலகத் தோடுநீர் உவந்திடும் வேளையும்
உலகம் யாவையும் தாமுளன் அவனை
உவப்புடன் நேர்ந்து விண்ணப்பம் தருதலை
உளமுடன் மகிழ்ந்து உண்மையாய் அளிக்கிறீர்
உம்முடன் எமக்கும் தரிசனம் கிடைத்ததே
உய்ந்தோம் ஐயா உம்மால் நாமும்!

Sankara Kumar