உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
என் மமதை
உன்னுதற் கரியனாய் உருவெது மில்லனாய்
.. உலவுனை உணர என்றன்
.... உறவெலாம் விடுத்துடல் பற்றெலாம் உதறிஇவ்
.... உலகிலே வாழ்ந்தி டாமல்
என்னிறை என்னவன் என்கணின் மணிஎனுள்
... என்றுமாய் உறையு மீசன்
.... என்றவாறு இடையறாது இங்குநான் மமதையை
..... ஏகமாய்ப் பெருக்கி வாழ்தல்
உன்பிழை அல்லவோ? ஈதுநீ உணர்ந்ததை
... ஒப்பிஎன் அருகில் வாரா(து)
.... ஓடுதல் அடியவர்க் குதவுவோன் எனச்சொலும்
..... உன்பெயர்க்(கு) ஒக்குமோ தான்?
இன்னவா றென்னையுன் னிடத்தினின்(று) அயலனாய்
.. எண்ணியே வினவல் விட்(டு)ன்
... இன்னருள் ஒளியிலே என்னைநான் இழந்திட
..... எந்தநாள் குறித்து ளாயோ.
என் மமதை
உன்னுதற் கரியனாய் உருவெது மில்லனாய்
.. உலவுனை உணர என்றன்
.... உறவெலாம் விடுத்துடல் பற்றெலாம் உதறிஇவ்
.... உலகிலே வாழ்ந்தி டாமல்
என்னிறை என்னவன் என்கணின் மணிஎனுள்
... என்றுமாய் உறையு மீசன்
.... என்றவாறு இடையறாது இங்குநான் மமதையை
..... ஏகமாய்ப் பெருக்கி வாழ்தல்
உன்பிழை அல்லவோ? ஈதுநீ உணர்ந்ததை
... ஒப்பிஎன் அருகில் வாரா(து)
.... ஓடுதல் அடியவர்க் குதவுவோன் எனச்சொலும்
..... உன்பெயர்க்(கு) ஒக்குமோ தான்?
இன்னவா றென்னையுன் னிடத்தினின்(று) அயலனாய்
.. எண்ணியே வினவல் விட்(டு)ன்
... இன்னருள் ஒளியிலே என்னைநான் இழந்திட
..... எந்தநாள் குறித்து ளாயோ.
1 comment:
A heart-rending poem. The lines " இன்னருள் ஒளியிலே என்னைநான் இழந்திட, எந்தநாள் குறித்துளாயோ?" does not apply to you, since you have already seen His Divine Light and have even started beaming it across to other mundane mortals like us. Sivam bless us all.
K'nan
------------------
பிரதோஷநாளன்று சிவ தரிசனம் செய்கிறேனோ இல்லையோ உங்கள் கவிதைகளை நிச்சயம் பார்க்கிறேனோ..சிவனின் கருணையால் நீண்ட நெடுங்காலம் அனைவரும் இப்படிப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும்!!
திவாகர்
--------------------
Post a Comment