Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - June 28 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தொண்டர்தம் பெருமை

நினைக்கும் மனங்கனியு(ம்) நிகழ்வில் அமிழ்ந்துவிழி
.. நிறைக்கும் சலத்திலுடல் நனையுமே
வினைக்குள் தியங்கியதன் விளைவில் உணங்குநிலை
.. விலக்கும் திறத்தின்வகை அறியுமே
அனைத்தும் மறைந்ததனில் அகமும் அடங்கியுனை
.. அடுக்கும் பெருத்தநிலை அமையுமே
கனைக்கும் சதங்கையணி கழலை அடைந்துநிதம்
.. களிக்கும் படிக்குளர்தம் கதையிதே

உணங்குதல் = வருந்துதல், வாடுதல்; தியங்குதல் = சோர்தல், சஞ்சலப்படுதல்

No comments: