Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - May 29 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நானென் செயும்அரன் நாமம்என் நாவால் நவின்றதுமென்
ஊனும் உருகி உணர்வும் உருகிஆங்(கு) உள்ளிருக்கும்
தானும் உருகிக் கரைந்தபின் ஆங்கே தனித்துநிற்கும்
கோனில் கலந்தவன் கூத்தின் குறிப்புடன் கூடிடுமே

இங்கே குறிப்பு என்றது OTL-ல் காணும்: intention, inmost thought, real purpose or motive; internal emotion attended with external gestures; 6. gesture; significant look or word

Revised version 25-1-2012

நானென் செயுமவன் நாமமென் நாவில் நவின்றவுடன்
ஊன்உள் ளுருக உணர்வும் உருக உயிருருக
ஆனந்த மாயந்த அம்பலந் தன்னில்நின் றாடுகின்ற
கோனென் முழுமையும் கொண்டங்குத் தான்குடி கொண்டபின்னே.

No comments: