Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - December 01 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அருணைப் பெருமான்

அருஉருவ வடிவ(ம்)உளம் அறியு(ம்)வழி மவுனம்என
... ஆலின் கீழாக
....அமரும்உன பெருமைமுனி வரர்தெரிய வகைபுரியும்
..... ஆசான் ஈசா!நின்

அருமைஅயன் அரிஉணர அனலின்எரி படிமமென
... ஆனாய் வானோர்அன்(று)
.... அமுதமதை அடையு(ம்)வணம் அருளிவிடம் மிடறில்அடை
..... சீலா! மேலான

ஒருபகுதி உமைஉறைய உதவிஉன(து) அடியர்உளம்
... மேவும் கோவே!நீ
.... ஒருமுறைஉன் இருபதம்என் உளமருவி உருகுநிலை
.... நீதா நாதா!நல்

பெருமைமிகு அருணைவளர் பெரும!அருள் ஒளியுமிழ்த
... யாளா! மாளாத
.... பிறவிமயல் விலகிஒளிர் பெருவெளியில் எளியனையும்
..... ஏலாய் மேலோயே!

1 comment:

ananth said...
This comment has been removed by the author.